எனது சாதியைச் சொல்லி மீம்ஸ் போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள், எதற்கும் துணிந்தவன் வைகோ..!மதிமுக – நாம் தமிழர் மோதல் ..!
உசிலம்பட்டி அருகே நாம் தமிழர் தொண்டர்களுக்கும்,மதிமுக தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளுவால் பதற்றம் நிலவியது.
கைரேகை சட்டத்தை எதிர்த்து மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில், போராட்டம் நடத்தியவர்களின் நினைவிடம் அமைந்துள்ளது.
இன்று அந்த நினைவிடத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்த சென்றார். அவர் திரும்பும்போது, நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அங்கே நின்றிருந்தனர்.
அவர்களை பார்த்த வைகோ, எனது சாதியைச் சொல்லி மீம்ஸ் போடுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்றும், எதற்கும் துணிந்தவன் வைகோ என்பதை சீமானிடத்தில் செல்லுங்கள் என்று, எச்சரிக்கும் வகையில் பேசினார்.
இதனால் கோபமடைந்த நாம் தமிழர் கட்சியினர், வீரவணக்கம் வீரவணக்கம் என முழக்கமிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த வைகோ, கையால் சைகை காட்டி, நாம் தமிழர் தொண்டர்களை எச்சரித்துச் சென்றார். இதையடுத்து, மதிமுக – நாம் தமிழர் தொண்டர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
நிலைமையை உணர்ந்த போலீசார், இரு தரப்பையும் விலக்கி விட்டு, வைகோவை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.