எனக்கு அந்த மாதிரி படங்களையும் தாண்டி,இந்த மாதிரி படம் தான் பிடிக்கும்!தமிழக பாஜக தலைவர் தமிழிசை

Published by
Venu

கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து இவர்களின் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘காலா’. இதனை நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்துள்ள நிலையில் இப்படத்திற்கும் அவரே இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே காலா படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் காலா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை ரசிகர்களிடையே காலா படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படம் குறித்த ரஜினிகாந்த் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோரின் பேச்சு காலா படத்திற்கான எதிர்பார்ப்பை இருமடங்காக்கியது.

இன்று படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் இன்று திரைக்கு சென்று காலா படம் பார்த்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Image result for காலா படம் பார்த்த தமிழிசை

காலா படம் கருப்பாக ஆரம்பித்து கலராக முடிந்துள்ளது.காலா படத்தில் சில வண்ணங்களை விட பல வண்ணங்கள் வந்தது. ரஜினி திரைப்பட நடிகராக அரசியலுக்கு வந்துள்ளார். நிறைய நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர்.

சினிமா வாழ்க்கை வேறு அரசியல் வேறு. ரஜினியின் சினிமா வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் சேர்த்து வைத்து பார்க்க கூடாது. ரஜினி படத்தில் முன்பே அரசியல் இருந்தது. இது அவரின் முதல் அரசியல் படமல்ல.

நான் திரைப்படத்திற்கு மார்க் போட மாட்டேன். எங்கள் சகோதரர்கள் எல்லாம் ஒன்றாக பார்க்க ஆசைப்பட்டதால் காலா பார்த்தோம். இப்போது இந்த படம்தான் பிரபலமாகி இருக்கிறது. அதனால் பார்த்தோம்.

காதல், ஆடல், பாடலையும் தாண்டி சமூக கருத்துக் கொண்ட படம் எனக்கு பிடிக்கும். அதனால் தான் காலா படம் பார்க்க வந்தேன்.

யார் வேண்டுமென்றாலும் அரசியல்வாதி ஆகலாம். இயக்குனரும் அரசியல்வாதி ஆகலாம். காலா படத்தில் பாஜகவை விமர்சித்ததாக நான் பார்க்கவில்லை. சினிமாவை வெறும் சினிமாவாக பார்க்க வேண்டும். சமூக கருத்துகளைக் கொண்ட படம் என்பதால் காலாவை பார்த்தேன்.படத்தை அரசியலுடன் இணைந்துப் பார்த்தால் பிரிவைதான் ஏற்படுத்தும், என்றுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

“இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு… ” அரங்கத்தை அதிர் வைத்த அஸ்வின்!

காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…

8 hours ago

திருப்பதி உயிரிழப்புகள் : நீதி விசாரணை, ரூ.25 லட்சம் நிவாரணம், அரசு வேலை! சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…

9 hours ago

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் பயங்கர விபத்து… 30க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன?

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…

11 hours ago

ஹைதராபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க அட்டகாசமான படுக்கை வசதி!

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக,  அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…

11 hours ago

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…

12 hours ago

திருப்பதி மரணங்கள்: ‘கைது நடவடிக்கை வேண்டும்’… பவன், சந்திரபாபு நாயுடுவுக்கு ரோஜா சரமாரி கேள்வி.!

ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…

12 hours ago