சென்னை:
திமுகவில் அங்கம் வகித்த நடிகை குஷ்பு, மு.க.ஸ்டாலின் குறித்து சில கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் குஷ்பு வீட்டை திமுக தொண்டர்கள் தாக்கி அந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இந்த மோதலுக்கு பிறகு குஷ்பு திமுவிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்து, அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.அதிலிருந்து நடிகை குஷ்பூ காங்கிரசில் இருந்து வருகின்றார்.அவ்வப்போது திமுக மீது குற்றச்சாட்டுக்களையும் , விமர்சனங்களையும் பதிவிட்டு வந்தார் நடிகை குஷ்பு.
சமீபத்தில் திமுக தலைவர் மறைந்த கருணாநிதி இறப்பின் பொது அவரது இரங்கலை வருத்தத்தோடு தெரிவித்தார். திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, ‘’இளவரசர் அரசராகிவிட்டார்” என்று தனது வாழ்த்துக்களையும் ட்விட்டரில் பதிவிட்டார் நடிகை குஷ்பு.
இந்நிலையில் சென்னை சந்தோம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி அரங்கத்தில், கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது.இதில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டார்.
அப்போது பேசிய நடிகை குஷ்பு,
தமிழ்நாட்டு மக்களுக்காக இறுதி வரை போராடிய கலைஞர் கருணாநிதியிடம் இருந்துதான் நான் தமிழையும், அரசியலையும் கற்றுக்கொண்டடேன் என்றார். எனக்கு தமிழ்மொழி மீதான பற்று வருவதற்கு காரணமே கருணாநிதி என்றும், மரியாதை என்பதற்கான அர்த்தத்தையும் கருணாநிதியிடம் தான் நான கற்றுக்கொண்டேன் என்றார் நடிகை குஷ்பு.
தொடர்ந்து பேசிய அவர் ,
எனக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உள்ளிட்ட கொள்கைகளை கற்றுக் கொடுத்ததும் கருணாநிதிதான் என்றார்.எனக்கும் மறந்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் இடையே இருந்த உறவு தந்தை , மகள் உறவு ஆனால் அரசியல் நாகரிகம் தெரியாதவர்கள் அரசியலுக்க்காக அந்த உறவை கொச்சை படுத்துகிறார்கள் என வேதனையுடன் தெரிவித்தார் நடிகை குஷ்பு.இந்த நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் மற்றும் பல திரைப்பட , அரசியல் ஆளுமைகள் பங்கேற்றனர்..
DINASUVADU
சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…