கோவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திவாகரன் கட்சி ஆரம்பித்து இருப்பதால் எங்களுக்கு எந்த பிரச்சினையயும் இல்லை. மக்கள் தான் தீர்ப்பு சொல்வார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் யாரும் அதிருப்தி இல்லை. ஆட்சியை தக்க வைத்தால் போதும் என்ற நிலையில் தற்போதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு சொல் படி கேட்டு நடந்து வருகிறது. எந்த தேர்தல் வந்தாலும் பா.ஜனதா, அ.தி.மு.க .ஆகிய கட்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் என்பது தேவையில்லாதது. இதற்காக எதற்கு ரு. 10 ஆயிரம் கோடி செலவு செய்யப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு பதிலாக சென்னை-கன்னியாகுமரி இடையே 8 வழி சாலை அமைக்க வேண்டியது தானே?.
18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பை நீதிமன்றம் உடனே வழங்க வேண்டும். தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மக்கள் மன்றத்தை நாட நாங்கள் தயாராக உள்ளோம்.
காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரி டெல்டா முக்கியமா? அல்லது சென்னை – சேலம் 8 வழிச்சாலை முக்கியமா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…