அமைச்சர் தங்கமணி ,நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்னுற்பத்தி பாதிக்கும் நிலை எந்த காலத்திலும் வராது என தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு நிலக்கரி வந்து சேர கால தாமதமாகிறது என்றும், இதற்கு உரிய தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறுப்பினர் செம்மலை கூறினார்.
மேலும் நிலக்கரியை தமிழகத்துக்கு கொண்டு வரும் பணியை தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகமே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, மத்திய அரசால் போதிய அளவு நிலக்கரியை தமிழகத்துக்கு அனுப்ப முடியவில்லை என்றும், இது தொடர்பாக டெல்லிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தற்போது நிலக்கரி தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது என்றும் கூறினார். அதேவேளையில் காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு அதிகரித்து வருவதால், தமிழகத்துக்கு வரக்கூடிய நிலக்கரி சேமித்து வைக்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைக்கு 8 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது என்றும், இனி எந்த நிலையிலும் நிலக்கரி தட்டுபாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு இருக்காது என்றும் தங்கமணி தெரிவித்தார். மேலும் மின்பாதை அமைப்பதிலும், துணை மின் நிலையங்கள் அமைப்பதிலும் சட்டமன்ற உறுப்பினர்களும் பொது மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கான இடத்தை தேர்வு செய்து தந்தால் முன்னுரிமை அளித்து அமைத்து தரப்படும் எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…
சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…