எதை விற்பனை செய்யபோகின்றாய்..? பாலை-யா அல்லது கள்-லையா இப்போதே முடிவெடுத்துக்கோங்க நடிகர் சூர்யா அட்வைஸ்..!!
ஒரு படம் எடுப்பது சுலபம். ஆனால் நல்ல படம் எடுப்பது ஒரு வீரன் போருக்கு போவது மாதிரி. இந்த விழாவுக்கு வந்திருப்பது, ஏதோ கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு வந்தது போல உணர்கிறேன். இந்த வயதில் யாராவது உதவி பண்ணினால் மேலே வந்துவிடலாம். இந்த வயதில் இருப்பவர்கள்தான் இனி வரும் நாட்களில் புதிய முயற்சிகளை உருவாக்கி சாதிப்பார்கள் என்று கூறினார்.
மேலும் தெரிவித்தது ,
நான் எழுபதுகளின் குழந்தையாக இருந்தேன் அப்போது எல்லாம் இல்லாத புதிய புதிய விஷயங்களை தற்போதிருக்கும் குழந்தைகள் அனுபவித்து வருகின்றனர். எந்த ஒரு விஷயம் பண்ணும்போதும், இன்னும் கொஞ்சம் நன்றாக பண்ணியிருக்கலாமோ என்று நினைத்தால், அதை அப்போதே உடனே சரி செய்து விடவேண்டும்.ஏனென்றால் உங்கள் வாழ்நாளையும் தாண்டி இதுதான் உங்களுக்கான முக்கியமான பதிவாக இருக்கப் போகிறது…
நிஜத்தில் நமக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ, இதுபோன்ற குறும்படங்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும்.அதைப்பார்த்து ஒரு சில நபர்கள் மனம் திருந்தினாலே அது நமக்கு வெற்றியை தேடி தரும் என்றார் நடிகர் சூர்யா….
இறுதியாக பேசிய அவர் , உங்கள் மனதுக்கு எது நெருக்கமாக இருக்கிறது என்று நீங்கள் உணருகின்றீர்களோ , அதை தயங்காமல் செய்யுங்கள் என்றும் நம்முடைய வாழ்க்கை ஒரு திறந்தவெளி மார்க்கெட் இதில் நாம் பாலும் விற்கலாம், கள்ளும் விற்கலாம். இரண்டுமே விலைபோகும்.அதனால் நீங்கள் எதை விற்க போகிறீர்கள் என நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று நடிகர் சூரியா கூறினார்….
DINASUVADU