தமிழக சட்டப்பேரவை முன்பு, விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரையை தடை செய்ய வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டபடியே வந்தனர்.
சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே வந்த அவர்கள், ராஜாஜி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது, அரசுக்கு எதிராக முழக்கமிட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். இதையடுத்து, அங்குவந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
மாலையில் சுமார் மூன்றரை மணியளவில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலவரத்தை தூண்டும் வகையில் ரதயாத்திரை நடப்பதாக கூறியதுடன், தமிழகத்தில் நடப்பது பாஜக ஆட்சியா அல்லது அதிமுக ஆட்சியா என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…
சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…