எட்டு வழிச்சாலை திட்டம் வெற்றிகரமாக நிறைவேறுமா..?

Default Image

சேலம் – சென்னை இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இந்த திட்டம் நிறைவேறுமா..?

கடந்த பிப். மாதம் 25ம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டமானது சுமுார் 277.3 கி.மீ. தூரத்திற்கு பசுமை வழிச்சாலை அமைப்பது தான்.

Image result for 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது
இந்த சாலை சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து சேலம் அருகே உள்ள அரியானூர் வரை இந்த சாலை போடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59.1 கி.மீ. பகுதியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 123.9 கி.மீ. பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கிமீ பகுதியிலும், தருமபுரி மாவட்டத்தில் 56 கிமீ. பகுதியிலும், சேலம் மாவட்த்தில் 36.3 கி.மீ. பகுதி என மொத்தம் 277.3 கி.மீ பகுதியில் இந்த சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Image result for 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது

இந்த சாலை அமைக்கும் பணிக்கு ஏராளமான விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.இதனால் இந்த சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.அரசும் காவல்துறையை வைத்து கடுமையான ஒடுக்குமுறையில் ஈடுபடடன.இந்த சூழலில் மக்கள் , கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தின.போராட்டத்தையும் ஒடுக்கும் விதமாக தமிழக அரசாங்கம் கைது நடவடிக்கைகளை தொடர்ந்தது.இந்நிலையில் தற்போது நீதிமன்றம் எட்டுவழிசலை திட்டத்திற்கு நிலம் தற்காலிகமாக கையகப்படுத்தக் கூடாது என்ற புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
Image result for மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின்
இந்நிலையில் 8 வழிச்சாலை விவகாரம் கடந்து வந்த பாதை.
எட்டு வழிச்சாலை திட்டம் இதுவரை நடந்தது என்ன?          

► பிப்ரவரி 2018 – மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சென்னை -சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டம்  அறிவிப்பு

► பிப்ரவரி 2018 – எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது

► மார்ச்  2018 – மும்பையை அடுத்து  நாட்டிலேயே இரண்டாவது பசுமை வழிச்சாலை தமிழகத்தில் அமைக்கப்படவுள்ளது  – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

► ஜூன் 2018 –  திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் தேசிய நெடுஞ்சாலை சட்டம் 1956-ன் படி கையகப்படுத்தப்படும் –  முதலமைச்சர் பழனிசாமி

► ஜூன் 2018 – புதிய நில எடுப்பு சட்டத்தின்படி  நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி

► ஜூன் 2018 – நகர்புறங்களில் கையகப்படுத்தும் இடங்களுக்கு சந்தை மதிப்பில் இரண்டு மடங்கு இழப்பீடு வழங்கப்படும் – தமிழக அரசு

► ஜூன் 2018 – கிராமங்களில் கையகப்படுத்தப்படும் இடங்களுக்கு சந்தை மதிப்பில் 2.5 முதல் 4 மடங்கு வரை இழப்பீடு வழங்கப்படும் – தமிழக அரசு

► ஜூன் 2018- எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக நில உரிமையாளர்கள், விவசாயிகள் உட்பட பலர் போராட்டம்

► ஜூன் 2018 – எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு

► ஜூன் 2018 – சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த மன்சூர் அலிகான், சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ், மாணவி வளர்மதி  கைது

► ஜூலை 2018 – விவசாயிகளின் கருத்துக்களை அறிய  முயற்சி செய்த முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கைது

► செப்டம்பர் 2018 – எட்டு வழிச்சாலை திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை.

► செப்டம்பர் 2018 – எட்டு வழிச்சாலை திட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்த தடை – சென்னை உயர்நீதிமன்றம்.

இந்த திட்டம் நிறைவேறுமா அல்ல மக்கள் போராட்டத்தால் இந்த திட்டம் முடக்கப்படும் என்று நாளுக்கு நாள் வரும் புதிய புதிய உத்தரவுகள் கேள்விகேட்க வைக்கின்றது என்று மக்கள் கருதுகிறார்கள்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்