எட்டுவழிச் சாலையில் “ரூ 50,0000” கஜாவில் ரூ “600”..என்ன நியாயம்..ராமதாஸ் கேள்வி..!!

Default Image

எட்டுவழிச் சாலையில் ஒரு  தென்னைக்கு ரூ.50,000 வழங்கிய தமிழக அரசு, கஜா புயலால் சேதமடைந்த ஒரு தென்னை மரத்துக்கு ரூ  600 ரூபாய் மட்டும் இழப்பீடு வழங்குவது எந்த வகையில் நியாயம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கஜா புலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் குறிப்பாக நெல், கரும்பு, வாழை, காய்கறிகள் உள்ளிட்ட பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500, அதாவது ஏக்கருக்கு ரூ.5400 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ள தொகை சேதமடைந்த பயிர்களை அகற்றி நிலத்தை சீரமைப்பதற்குக் கூட போதாது. ஒரு தென்னை மரத்துக்கு 600 ரூபாய் இழப்பீடு வழங்கப்படுவதாக அறிவித்த தமிழக அரசு  எட்டுவழிச் சாலைக்கு நிலம் எடுக்கப்படும் போது ஒரு தென்னைக்கு ரூ.50,000 வழங்கியது எந்தவகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையை தென்னை மரங்களில் ஒருமுறை தேங்காய் பறித்தாலே இதைவிட அதிக வருமானம் கிடைக்கும்  அறிவித்துள்ள நிவாரண தொகை  யானைப்பசிக்கு சோளப்பொறியாகவே அமையும். இது போதுமானதல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்