எங்களின் பலம் தெரியவில்லை…வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்…..நடிகர் சரத்குமார்..!!
அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால் எங்களின் பலம் தெரியவில்லை வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால் எங்களின் பலம் தெரியாமல் போனது, வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்.சபரிமலை விவகாரத்தில் வழிபாட்டு முறைகள் என்னவோ அதை நாம் கடைபிடிக்க வேண்டும் மீ டூ விவகாரத்தில் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை தாமதமாக ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. பெண்களுக்கு எதிராக எந்த ஒரு அநீதியும் நடக்கக்கூடாது என்பது எனது கொள்கை என கூறினார்.
DINASUVADU