எங்க?எப்பம்?எப்படி போகணும்னு விஜயை பார்த்து கத்துகோங்க ரஜினிகாந்த்!அவரு போனாரே ஒரு பிரச்சினை வந்ததா?அமீர் கேள்வி

Default Image

நேற்று நள்ளிரவில் நடிகர் விஜய் அறிவிக்காமலேயே தூத்துக்குடி சென்றுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நடிகர் விஜய் நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் ஸ்லோனின் ஜான்சி உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்ற விஜய் ஆறுதல் தெரிவித்து மட்டுமல்லாமல் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினார். பலியானோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

 

இதனிடையே இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறும்போது, ” மகளை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டு வெளியே உட்கார்ந்திருந்தோம். அந்த நேரத்தில் இரண்டு பைக் வந்தது. யாரென்று தெரியவில்லையே என பார்த்தோம். உடனே கையெடுத்து கும்பிட்டப்படி விஜய் வீட்டுக்குள் வந்தார். எங்களுடன் அமர்ந்து எங்களுடைய அனுதாபத்திலும், சோகத்திலும் பங்கெடுத்துக் கொண்டார். ‘நேரம் பிந்தி வந்தேம்மா’ அதற்காக தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் என்றார். மேலும் இரவு நேரத்தில் வந்ததற்காக எங்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். புகைப்படம் கூட எடுக்க வேண்டாம் என்று மிகவும் எளிமையாக நடந்து கொண்டார். எங்கள் வேதனையில் மகனைப் போல பங்கெடுத்துக் கொண்டார்” என தெரிவித்தனர்.

இந்நிலையில்  இயக்குநர் அமீர் விஜய்யிடம் இருந்து ரஜினி பாடம் கற்றுக் கொள்ளலாம் என்று  தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அமீர் இது குறித்து பேசுகையில்,  அப்போது அவருடன் நடிகர் விஜய்யின் தூத்துக்குடி பயணம் பற்றிக் கேட்கப்பட்டது.

Image result for rajinikanthஅதற்கு அவர்  பிரச்னைக்குளான இடத்திற்கு எவ்வாறு சென்று சர்ச்சை எதுவும் இன்றி பார்வையிட்டு திரும்புவது என்பது குறித்து, விஜய்யிடம் இருந்து ரஜினி பாடம் கற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக  தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட்வர்களை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் சமூக விரோதிகள் தான் துப்பாக்கிச்சூட்டிற்கு காரணம் என பேட்டியளித்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு பல தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்