ஊதிய உயர்வுக்கு ஒப்புக் கொள்ளும் வரை வேலை நிறுத்தம் தொடரும்!
போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் 13-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் அரசு ஒப்புக் கொண்ட ஊதிய உயர்வு போதாது எனக் கோரியும் தாங்கள் கோரிக்கை விடுத்தபடி ஊதிய உயர்வுக்கான காரணிகளை நிர்ணயிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், தொழிற்சங்கங்கள் மாறுபட்ட ஊதிய முரண்பாட்டை ஏற்கமுடியாது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தைக் கூட்டி அதை 2.57 என்ற காரணியால் பெருக்கி வரும் தொகையை ஊதியமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அரசு 2.44 என்ற காரணியால் பெருக்கி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் வழங்க சம்மதித்துள்ளது. எனவே, அரசு முடிவான 2.44 காரணிக்கும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையான 2.57 என்ற காரணிக்கும் இடையே உள்ள 0.13 என்ற பெருக்கல் காரணியே பிரச்னையாக உள்ளது.
source: dinasuvadu.com