மீண்டும் திமுகவால் தொடரப்பட்ட, பழங்குடியினர் இட ஒதுக்கீடு, எல்லை வரையறை தொடர்பான வழக்குகளை அடுத்து, மறுவரையறை மற்றும் நிதி தொடர்பாக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், தீர்ப்பின் அடிப்படையில், தேர்தல் நடத்தப்படும் என கூறிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சி தேர்தல் நடைபெறாவிட்டாலும், பணிகள் தொய்வு இல்லாமல் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், திமுக உறுப்பினர் தாமோ. அன்பரசன் கேள்விக்கு பதிலளித்த அவர், 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டபோது, திமுக வழக்கு தொடர்ந்ததாக கூறினார்.