உளவுதுறை எதற்க்கு? அரசுக்கா…!அரசியல்வாதிக்கா…??
சிபிஐ சோதனை நடத்தப் போவது குறித்து தமிழக உளவுத்துறை அதிகாரிகளால் முன்கூட்டியே கண்டுபிடிக்க முடிய வில்லை. இதனால் உளவுத் துறையின் தலைமை அதிகாரியை, அவருக்கு மேலுள்ள அதிகாரியும் அரசியல்வாதி ஒருவரும் கூப்பிட்டு கண்டித்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. இதனால் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருப்பதற்காக சிபிஐயின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குட்கா விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து, முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, காவல் துறை அதிகாரிகள் பலரது பெயர்களைக் கூறி, அவர்கள்தான் குற்றம் செய்தனர் என்றார்.
ஜார்ஜின் இந்த குற்றச்சாட்டு, தற்போது பணியில் இருக்கும் போலீஸார் இடையே கலக் கத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘செய்தி யாளர்கள் பேட்டியிலேயே அதிகாரி களின் பெயர்களை கூறிய ஜார்ஜ், குட்கா விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளின் பெயர்களையும் சிபிஐ அதிகாரிகளிடம் கூறி இருப்பார். இதனால் சிபிஐ மூலம் நம்மீது விரைவில் நடவடிக்கை இருக்கும்’ என்று தற்போது பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் கலங்கிப்போய் உள்ளனர்.
அடுத்து என்ன செய்யலாம், சிபிஐ நடவடிக்கைகளில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. மேலும் இதற்காக அரசியல்வாதி ஒருவரின் உதவியையும் நாடியுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று காலையில் நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்துக்கு வந்த அமலாக் கத்துறை அதிகாரிகள் 6 பேர், குட்கா விவகாரம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
பின்னர் தங்களுக்கு தேவை யான சில ஆவணங்களை மட்டும் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு சென்றனர்.இதனால் குட்கா விவகாரத்தில் அமலாக் கத்துறையும் அதிரடி நடவடிக்கை எடுக்க வாய்ப் பிருப்பதால், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
DINASUVADU