புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மருந்துக்கடைக்கு வேலைக்கு சென்ற இடத்தில் மாயமான இளம்பெண், காதலனால் பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி . ஆலங்குடியில் உள்ள மருந்து கடை ஒன்றில் வேலைபார்த்து வந்த கஸ்தூரி கடந்த 28ஆம் தேதி மாயமானார். வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் கஸ்தூரியின் பெற்றோர் ஆலங்குடி காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீஸ் விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் அதிரான்விடுதியை சேர்ந்த லோடு ஆட்டோ ஓட்டுனரான நாகராஜ் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக கஸ்தூரியை காதலித்ததாகவும், , மாயமான அன்று இருவரும் ஆலங்குடியில் இருந்து ஒன்றாக இருசக்கர வாகனத்தில் சென்றதும் தெரியவந்தது.
மேலும் நாகராஜ் அதன் பிறகு தலைமறைவாகி விட்டதால் அவர் கஸ்தூரியுடன் வெளியூருக்கு சென்றிருக்கலாம் என்று கருதிய காவல்துறையினர். கஸ்தூரி மாயமானதாக வழக்கு பதிவு செய்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அவரது செல்போன் எண்ணை வைத்து ஆய்வு மேற்கொண்டதில் நாகராஜ் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
கஸ்தூரியை காதலித்து வந்த நாகராஜ் கடந்த 28ஆம் தேதி ஆலங்குடி ஆதனக்கோட்டை சாலையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, இளம் பெண் கஸ்தூரியிடம் , நாகராஜ் அத்துமீறியதாக கூறப்படுகின்றது. கஸ்தூரி உதவி கேட்டு அலறியதால் அவரது வாயை பொத்தி உள்ளான் நாகராஜ். பலாத்கார முயற்சியால் மூச்சுதிணறல் ஏற்பட்டு கஸ்தூரி பரிதாபமாக பலியானதாகக் கூறப்படுகின்றது. தனிமையை கழிக்க வந்த இடத்தில் காதலி கஸ்தூரி இறந்து போனதால் தன் மீது கொலைப்பழி வந்துவிடும் என்று பயந்து அதனை மறைக்க திட்டமிட்டுள்ளான்.
அங்கேயே ஒரு பகுதியில் சடலத்தை மறைத்து வைத்து விட்டு இருட்டிய பின்னர் தனது லோடு ஆட்டோவை கொண்டு வந்து, கஸ்தூரியின் சடலத்தை சாக்கு பையில் கட்டி ஏற்றி உள்ளான் நாகராஜ் . பின்னர் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள ஆற்றில் சடலத்தை வீசி விட்டு, சென்னைக்கு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே கொலையாளி நாகராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, கதறி அழுத கஸ்தூரியின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.கஸ்தூரியுடன் தான் தனிமையில் இருந்த போது அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்று கூறி முதலில் காவல்துறையினரிடம், கொலையாளி நாகராஜ் நாடகமாடியதாகவும், தீவிர விசாரணையில் கொலையை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து சந்தேக மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. கொலை , மானபங்கம், பலாத்காரம், ஏமாற்றி அழைத்து செல்லுதல், தடயத்தை அழித்தால், பெண்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இருந்தாலும் வியாழக்கிழமை நடக்க இருக்கின்ற பிணக்கூறாய்வில் கஸ்தூரி உயிரிழப்புக்காண கூடுதல் காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.கொலையான கஸ்தூரியும், கொலையாளி நாகராஜும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த கொலை சம்பவம் ஆலங்குடி பகுதியில் பதற்றத்தை உண்டாக்கி உள்ளது.
dinasuvadu.com
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…