உலக வெப்பமயமாதல் அதிகரிப்பதை கட்டுப்படுத்த இயற்கையை பாதுகாப்பது நமது கடமை!ஆளுநர் பன்வாரிலால்
உலக வெப்பமயமாதல் அதிகரிப்பதை கட்டுப்படுத்த இயற்கையை பாதுகாப்பது நமது கடமை என்று ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் பள்ளி முடிந்து வெளியே செல்லும்போது ஃபேன், லைட்ஸ்களை அணைத்துவிட்டு செல்லுங்கள். சாதாரணமான வாழ்வையை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி மாணவர்களிடையே ஆளுநர் பன்வாரிலால் உரையாடினார். சென்னை வியாசர்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆளுநர் பன்வாரிலால் மரக்கன்றுகளை நட்டார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகளை நட்டார்.