உலக நாடுகளின் தலைசிறந்த வினோதமான சிகிச்சை முறைகள்..!
கம்போடியாவில் வாத நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆமை மூலம் மேற்கொள்ளப்படும் சிகிச்சை.
கெய்ரோவில் கழுத்துவரை மண்ணில் புதைந்துள்ள நபர். இத்தகைய மணல் சிகிச்சையால் வாத நோய், மூட்டு வலி உள்ளிட்டவை நீங்கும் என்பது நம்பிக்கை.
சீனாவின் லியானிங் மாகாணத்தில் களி மண் சிகிச்சை மேற்கொண்டுள்ளவர்கள். கனிம வளம் நிறைந்த இந்த களி மண்ணில் புதைந்து கிடப்பதன் மூலம் முடக்குவாதம், நரம்பு மண்டல நோய்கள் உள்ளிட்டவை நீங்குமாம்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அழகு சிகிச்சை மேற்கொண்டுள்ள பெண்ணின் முகத்தில் ஊர்ந்து செல்லும் நத்தைகள்.
முகத்தில் ஏற்படும் வாத நோயைப் போக்குவதற்காக சீனாவில் மேற்கொள்ளப்படும் பாரம்பரியமான சிகிச்சை. சிகிச்சை பெறுபவரின் கண்களின் மீது வால்நட் பருப்பும், காதுகளில் குழாய் மீது எரியூட்டப்பட்ட மோக்ஸா இலைகளும் உள்ளன.