உலகில் அணுப்போர் தொடங்கினால் இந்த ஆய்வு மையத்தின் மேல் குண்டு வீசினால்…!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தினால் அணு ஆயுதப்போர் ஏற்படும்போது தமிழகம் அழியும் என தெரிவித்துள்ளார்.
நியூட்ரினோ திட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் வைகோவின் நடைப்பயணத்தை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணம் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களின் வழியாகச் சென்று வரும் 9 ந் தேதி தேனி மாவட்டம் கம்பத்தில் முடிவடைகிறது.
இந்த நடைப்பயணத்தின் தொடக்க விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த நடைப்பயணத்தின் தொடக்க விழாவின்போது பேசிய வைகோ, நியூட்ரினோ ஆய்வு மையத்தை மகாராஷ்ட்ராவிலோ, குஜராத்திலோ பிரதமர் மோடி அமைக்கலாம் தானே எனவும், தமிழகத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுத்து விடும் என அதீத நம்பிக்கையுடன் நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்க மத்திய அரசு துடிப்பதாக குற்றம்சாட்டினார்.
நீதிமன்றத்தின் மூலமும், மக்களை திரட்டியும் இத்திட்டத்தை எதிர்ப்போம் என தெரிவித்த அவர், இதனால் உலகில் அணுப்போர் தொடங்கினால் இந்த ஆய்வு மையத்தின் மேல் குண்டு வீசினால், தமிழகமும் கேரளாவும் அழியும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.