பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார். அமித் ஷாவை தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ்,மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகிகளுடன் உயர்மட்டக்குழு கூட்டத்தில் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசியல் விவகார குழுவை சேர்ந்த 16பேரிடம் 39நாடாளுமன்ற தொகுதிகள் பற்றி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.இதில் தமிழிசை,முரளிதரராவ்,பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா,தமிழகத்தில் நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டல், கேலி செய்தனர். 2019 மார்ச்சுக்குள் தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது என எதிர்ப்பாளர்கள் பார்ப்பீர்கள் .70 ஆண்டுகளில் முந்தைய அரசுகள் செய்யாததை 4 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது.நீர்பாசனத்திட்டம், சென்னை மெட்ரோ திட்டம் உட்பட பல திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1500 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.11 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக விளங்குகிறது பாஜக”என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…
சென்னை : பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பலரும் மெட்ரோ ரயில்களை புக்கிங் செய்து வருகிறார்கள். இந்த சூழலில், பொங்கல்…