உரிய நீர் காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் கிடைக்கும்!துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளதால், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் உரிய நீர் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
தி.மு.க. நடத்தும் அனைத்து கட்சி கூட்டமோ, போராட்டமோ தற்போது தேவையில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்தார்
முதல்வருக்கும் தமக்கும் எந்த பிணக்கும் இல்லை என்றும், எல்லா நிகழ்ச்சிகளிலும் இருவரும் கலந்துகொள்ள வேண்டியதில்லை என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.