காவிரியில் உரிய தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற நடவடிக்கை எடுக்கப்படும்! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Default Image

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியதும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், நேற்று டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமரிடமும், நீர் வளத்துறை அமைச்சரிடமும், காவிரி மேலாண்மை வாரிய உறுப்பினர் கூட்டத்தை கூட்ட வேண்டும், தமிழகத்திற்கு உரிய நீரை பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியதும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்