உரிய இழப்பீடு சென்னை-சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்திற்கு நிலம் வழங்குபவர்களுக்கு வழங்கப்படும்!முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ,தமிழகத்தின் முன்னோடி திட்டமான சென்னை-சேலம் பசுமைவழிச்சாலைக்கு தேவையான நிலத்தை மட்டுமே அரசு எடுக்கும் என தெரிவித்தார்.
மானிய கோரிக்கை மீதான விவாத்தில் பேசிய உத்திரமேரூர் திமுக எம்.எல்.ஏ., சுந்தர் கேள்விக்கு முதலமைச்சர் பதிலளித்துப் பேசினார். அப்போது, சென்னை-சேலம் பசுமைவழிச்சாலைக்கு நிலம் வழங்குபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும், விவசாயிகள் விருப்பப்பட்டால் மாற்று நிலமும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.