சென்னை உயர்நீதிமன்றம் ,108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட அவசர வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தது.
சேலம் ஆத்தூரை சேர்ந்த செல்வராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 4 ஆயிரத்து 750 பேர் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளது சுட்டிக்காட்டப்பட்டது.
போராட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பார்கள் என்றும், இதன் மூலம் மருத்துவ அவசர சிகிச்சைகள் அளிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.
இதேபோன்ற வழக்கில் முந்தைய தடை உத்தரவுகளை சுட்டிக்காட்டி தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ், ஆனந்த வெங்கடேஷ் அமர்வில் மனுதாரர் முறையீடு செய்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்…
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…