உயர்நீதிமன்றத்தில் கையை விரித்த அப்போலோ மருத்துவனை!ஜெ. தொடர்பான எதுவும் எங்களிடம் இல்லை!

Published by
Venu

அப்போலோ மருத்துவனை நிர்வாகம்,மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ரத்தம், திசு உள்ளிட்ட உயிரி மாதிரிகள் எதுவும் தங்களிடம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர், தாம் தான் ஜெயலலிதாவின் வாரிசு எனக் கோரும் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளிட்ட உயிரி மாதிரிகள் இருக்கிறதா? என்பது பற்றி, அப்போலோ மருத்துவமனை இன்று பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அப்போலோ மருத்துவமனையின் சட்டப்பிரிவு மேலாளர் S.M.மோகன்குமார் சார்பில், பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அதே ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி வரை, 75 நாட்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அவரது சிகிச்சைத் தொடர்பான அனைத்து மருத்துவ ஆவணங்களையும், டிசம்பர் 7ஆம் தேதி தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சையின்போது, ஜெயலலிதாவிடம் இருந்து தேவையான அளவு எடுக்கப்பட்ட, ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட உயிரி மாதிரிகள் அனைத்தும் சிகிச்சைக்கான ஆய்விற்காக, அப்போதே பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும் அப்போலோ மருத்துவமனை கூறியுள்ளது. மேலும், ஜெயலலிதாவிடமிருந்து, திசு மாதிரிகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால், திசு மாதிரிகள் எதுவும் தங்களிடம் இல்லை என்றும், பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதில் மனுவை தாக்கல் செய்த பின் அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர், நீதிபதியிடன் சில விளக்கங்களையும் அளித்தார். பொதுவாக ரத்தம், சிறுநீர் மாதிரிகளை நீண்ட காலத்திற்கு பாதுகாத்து வைக்க முடியாது என்பதாலேயே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம், சிறுநீர் மாதிரிகள் பாதுகாக்கப்படவில்லை என்றும், அப்போலோ வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதாவிடம் இருந்து எடுக்கப்பட்ட அனைத்து மாதிரிகளும், சிகிச்சையின்போதே பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும், அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர் கூறினார். இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை வருகிற ஜூன் மாதம் 4ஆம் தேதிக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்! 

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

9 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

9 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

9 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

10 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

10 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

11 hours ago