உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் -ஈபிஎஸ் கதறல் …!தினகரன் அதிமுகவின் புகழை நேர்மையற்ற வகையில் பயன்படுத்த முயற்சி…!
உயர்நீதிமன்றத்தில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், அதிமுகவின் புகழை நேர்மையற்ற வகையில் பயன்படுத்த முயல்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி, அதற்குக் கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தக் கொடியை, அதிமுகவின் கொடிபோல இருப்பதாகக் கூறி அதைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரிச் சென்னை உயர்நீதிமன்றத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வழக்குத் தொடுத்துள்ளனர்.
தினகரனின் பதில் மனுவுக்கு, அதிமுக தாக்கல் செய்த விளக்கப் பதில் மனுவில், தினகரன் பொதுமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், அதிமுக கொடியைப் போலத் தன் கட்சிக் கொடியை வடிவமைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் மனு தாக்கல் செய்ய அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 3ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.