உயரும் பெட்ரோல் விலை …!இரு சக்கர வாகனங்களை மாட்டுவண்டியில் ஏற்றி நூதன முறையில் போராட்டம் …!
காஞ்சிபுரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இரு சக்கர வாகனங்களை மாட்டுவண்டியில் ஏற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இரு சக்கர வாகனங்களை மாட்டுவண்டியில் ஏற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.