தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கையில் பல சுற்றுகள் முடிவடைந்த நிலையில், ஆரம்பத்தில் இருந்து தற்போதுவரை திமுக முன்னிலை பெற்று வருகிறது. திமுக 157 இடங்களிலும், அதிமுக 77 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 0, நாம் தமிழர் கட்சி 0, அமமுக 0, என முன்னிலையில் உள்ளனர்
இதில் திமுக நேரடியாக போட்டியிட்ட 124 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 17, மதிமுக 4, சிபிஎம் 2, சிபிஐ 2, விசிக 4, மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் வகித்து வருகிறது.
இந்நிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற்றுள்ளார்.அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் களம்கண்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக சட்டமன்ற பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மிகவும் கவணிக்கப்பட்டு மக்களை கவர்ந்தது.இதற்கு காரணம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாததை சுட்டிக்காட்டி செங்கலை வைத்து பிரச்சாரம் செய்தது நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தனது வெற்றிக்கு பின்னர் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலை திமுக தலைவரிடம் வழங்கியிருக்கும் புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…