உதகை:யானை வழிதடத்தில் கட்டிய 27 தனியார் குடியிருப்புகளுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது..!!!
உதகையில் யானைகள் வழித்தடங்களில் கட்டப்பட்ட 27 தனியார் குடியிருப்பு கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கபட்டுள்ளது. குடியிருப்புகளுக்கான அனுமதி பெற்றுவிட்டு சொகுசு விடுதிகளாக இயங்கிய கட்டடங்களுக்கு காவல்துறை பாதுகாப்புடன் அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.
கடந்த, 30 ஆண்டுகளில், நீலகிரி மாவட்டம், கல்லாறு, குரும்பாடி, கோத்தகிரி, சோலுார், பொக்காபுரம், மசினகுடி, கூடலுார், பந்தலுார், ஓவேலி பகுதிகளில், யானை வழித்தடத்தில், நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள், சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
கோடை காலங்களில் தண்ணீர், உணவுக்காக இடம் மாறும் யானைகள், வழிமாறி சென்று, குடியிருப்புகள் மற்றும் வேளாண் தோட்டங்களுக்கு சென்று சேதம் விளைவிக்கின்றன. வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில், மனித- யானை மோதல் அடிக்கடி நடந்து வருகிறது.
இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில், நீலகிரி மாவட்ட நிர்வாகம், யானை வழித்தடங்களில், உள்ள கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்த போது, அதில் குடியிருப்பு, விடுதிகள் என, 840 கட்டுமானங்கள் இருந்தது தெரியவந்தது.
மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த விசாரணையின் போது, ‘நீலகிரியில், முதற்கட்டமாக, 39 சுற்றுலா விடுதிகள் உரிய அனுமதி விட்டிற்கு வாங்கி கொண்டு சுற்றுலா விடுதிகளை கட்டியுள்ளது இதனை உள்ளடக்கிய, 309 கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட்டது.
யானை வழிதடத்தில் கட்டிய தனியார் சொகுசு விடுதிகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்