உண்மையான அதிமுகவினர் வேறு அணிக்கு செல்ல மாட்டார்கள் – அமைச்சர் ஓ.எஸ் மணியன்….!!
உண்மையான அதிமுகவினர் வேறு கட்சிக்கு செல்லமாட்டார்கள் என்று, செந்தில் பாலாஜிக்கு கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன், பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் கைத்தறி கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஓ.எஸ் மணியன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த சீரிய நடவடிக்கையால் கைத்தறி துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குவதாக தெரிவித்தார்.
மேலும் உண்மையான அதிமுகவினர் என்றுமே வேறு கட்சிக்கு செல்ல விரும்பமாட்டார்கள் என்று திமுகவிற்கு சென்றுள்ள செந்தில்பாலாஜிக்கு அவர் பதிலடி கொடுத்தார்.