உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு!
திமுக சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அமைக்காததுடன், மேலும் 3 மாதம் கால அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
இதனை கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் வரும் 5ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே சென்னை சேப்பாக்கத்தில் இன்று திமுக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது.
திமுக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.