உணவு சாப்பிடக் கூட நேரம் வேண்டாம்…மேலே இருந்து கொண்டு சாப்பிடும் ஊழியர்…வைரலாகும் புகைப்படம்..!!
கஜா புயலால் டெல்டா மாவட்டம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.டெல்ட்டா பகுதி மக்களின் வாழ்வானது பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுவிடத்து தற்போது வேதனையின் உச்சமாக உள்ளது.தற்போது நிவாரண பணி மீட்ப்பு பணி , சீரமைப்பு பணி என முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.இங்கே பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்கள் சரிந்து மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் கடந்த ஏழு நாட்களாக தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மின் ஊழியர்கள் ஈடுபட்டு தீவிரமாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.இன்று அப்படி ஒரு ஊழியர் சீரமைப்பு பணியை மேற்கொண்டு இருக்கும் போது உணவு சாப்பிடக்கூட நேரமின்றி மின் கம்பத்தின் உச்சியில் அமர்ந்தபடியே ஊழியர் உணவு உண்ணும் காட்சி, காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. புயல் பாதிப்பு பகுதிகளில் இரவு பகல் பாராது, தங்கள் உயிரையும் துச்சம் என மதித்து மின்ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே பாராட்டிள்ளார்.
dinasuvadu.com