உடையும் மு.க.ஸ்டாலினின் குடும்பம்…!மு.க.அழகிரிக்கு திடீர் ஆதரவு கடிதம் …!கலக்கத்தில் ஸ்டாலினின் ஆதரவு படை…!

Published by
Venu

கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து தனது சகோதரர்  அழகிரிக்கு கடிதம் ஒன்றை  எழுதியுள்ளார்.

Image result for mk MUTHU

 

சென்னையில் மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கருணாநிதி சமாதி நோக்கி அமைதி பேரணி நடத்தினர்.பேரணி நடத்துவதற்கு முன்பு அதிரடியாக பேசிய முக.அழகிரி , விமர்சனம் செய்த முக.அழகிரி , குற்றச்சாட்டுகளை முன் வைத்த முக.அழகிரி மெரினா பேரணி முடிந்து எவ்விதமான அறிக்கையும் வெளியிடாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைதி பேரணி ஒரு வழியாக முடிந்துள்ளது.ஆனால் முக.அழகிரி முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடாதது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.பெரிய எதிர்பார்ப்புடன் இன்று நடந்த பேரணியின் முடிவில் பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதாவது அழகிரி தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இல்லையென்றால் திமுக குறித்தும் ,முக ஸ்டாலின் குறித்தும் பேசுவார் என்று எதிர்ப்பாசர்க்கப்பட்டது.ஆனால் முக.அழகிரி எதையுமே பேசாதது ஒரு பரபரப்பாக இருக்கின்ற்றது.

இன்று காலை மெரினாவில் பேரணியின் முடிவில் அண்ணா, கருணாநிதி சமாதியில் அழகிரி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி. இது முழுக்க முழுக்க அஞ்சலி பேரணி. இதில் அரசியல் நோக்கம் இல்லை என்றார். இது தொண்டர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.முக அழகிரி இப்படி பேசுவார் என்று தொண்டர்கள் உட்பட யாரும் நினைக்கவில்லை.

இந்த பேரணி நடத்துவதால் கட்சியில் தொண்டர்கள் தன் பக்கம் வருவார்கள் என்று எதிர்பார்த்தார் முக அழகிரி . ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒரு காலத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களே அவரை வந்து சந்திக்கவில்லை. ஸ்டாலினால் நீக்கப்பட்டவர்கள் கூட அழகிரியை சந்திக்கவில்லை.பேரணி குறித்து முக அழகிரி நடத்திய ஆலோசனை கூட்டத்திலும் தொண்டர்கள் குறைவாக இருந்தனர். பேரணி குறித்தும் , அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் முக.அழகிரி நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு தினமும் 5 முதல் 6 பேர் மட்டுமே அழகிரியை சந்தித்தனர்.

நேற்று கூட அவரது பேரணிக்கு 7 ஆயிரம் பேர் மட்டுமே வந்து இருந்தனர்.நேற்று  அழகிரி கனிமொழியை சந்திக்கவில்லை. ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றதற்கு கனிமொழி ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் அப்போதே அழகிரி கனிமொழி உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.காரணம் அழகிரி, கட்சியில் தனக்கு முன்னைப்போல செல்வாக்கு இல்லை என்று உணர்ந்து திமுகவின் தலைவராக ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள தயார் என்று தெரிவித்தார். ஆனால் அதன்பின்பும் கூட திமுக தரப்பு அவரை கண்டுகொள்ளவில்லை. ஒருவரும் பேட்டி கூட இதை பற்றி அளிக்கவில்லை. இதன் காரணமாகவே அவர் முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்  கருணாநிதியின் மூத்த மகன்  மு.க.முத்து, அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் அண்ணனுமான அவர் ,மு .க.அழகிரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘என் தம்பி, அழகிரியின் பேரணிக்கு என் வாழ்த்துகள்’  மு.க.முத்து’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மு.க.ஸ்டாலினின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்பதிக்கு ஆளாகியுள்ளனர்.

DINASUVADU

 

Recent Posts

நாளை சென்னைக்கு கனமழை அலர்ட்…மின்தடை ஏற்படும் இடங்களை குறிச்சி வச்சிக்கோங்க!

சென்னை :  நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…

3 hours ago

நாளை நடைபெறவிருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

4 hours ago

கனமழை எதிரொலி : திருச்சி பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

4 hours ago

நாளை ரெட் அலர்ட்! மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

மயிலாடுதுறை :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…

4 hours ago

நாளை கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடலூர் :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

5 hours ago

“அமரன் படம் சூப்பர் நண்பா”…இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய தளபதி விஜய்!

சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…

5 hours ago