உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் தமிழ்நாடு
உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தொடந்து 3 வருடமாக முதலிடம் பிடித்துள்ளது. இதனால் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா அவர்கள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்களுக்கு விருது வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘தமிழகத்தில் இதுவரை ஆயிரத்து 56 கொடையாளிகளிடம் இருந்து 5 ஆயிரத்து 933 உறுப்புக்கள் தானமாக பெறப்பட்டு தேவையானவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது’ என அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவு உடலுறுப்பு தானம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் 35 லட்சம் ரூபாய் வரை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.