பாலக்காட்டை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த மே 18ம் தேதி 6 பேருடன் சென்னையிலிருந்து காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது விழுப்புரம் அருகே விபத்து ஏற்பட்டது. அதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் மணிகண்டன், சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த மணிகண்டன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் மே 20ம் தேதி தெரிவித்தனர். இதையடுத்து சிகிச்சை கட்டணமாக ரூ.3.25 லட்சத்தையும் அவரது உடலை பாலக்காடு வரை கொண்டு சேர்க்க 25000 ரூபாயையும் அவரது குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளது.
ஆனால் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து மணிகண்டனின் உடலுறுப்புகளை எடுத்து கொண்டு அவரது உடலை மட்டும் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் மணிகண்டனின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேரள முதல்வர், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் மணிகண்டனின் குடும்பத்தினரின் அனுமதியோடு தான் அவரது உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. பணத்திற்காக உடல் உறுப்புகள் திருடப்பட்ட இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளிக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…