கருணாநிதியின் மருத்துவ அறிக்கையை தொடர்ந்து சென்னையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிபட்டு வருகின்றனர்.
இன்று 11 ஆவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.நேற்று மாலை அறிக்கை ஓன்று வெளியானது.அதேபோல் இன்றும் அறிக்கை ஓன்று வெளியாகியுள்ளது.
இன்று (ஆகஸ்ட் 7ஆம் தேதி) காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:
சரியாக மாலை 04.30 மணிக்கு அறிக்கை வெளியிடப்பட்டது.அறிக்கையில் கூறியது, கருணாநிதியின் முக்கிய உறுப்புகள் படிப்படியாக செயலிழப்பதால் அவரது உடல்நிலை மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மணிநேரங்களாக உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகி வருகிறது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. தீவிர சிகிச்சைக்கு பின்னும் கலைஞரின் உடல்நிலை மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது. கலைஞரின் முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடு தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்று வெளியான அறிக்கையில் மிகவும் கவலைக்கிடம் என்று வெளியானது.
கருணாநிதி உடல்நிலையில் மிகவும் பின்னடைவு என்ற செய்தியால் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.மேலும் பலர் கதறி அழுது வருகின்றனர்.
இதன் பின் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் யாருக்கும் காவேரி மருத்துவமனைக்குள் அனுமதி இல்லை காவல்துறையினர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.வெளியிலிருந்து யாரும் காவேரி மருத்துவமனைக்குள் வர இனி அனுமதியில்லை என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது.`
கருணாநிதியின் மருத்துவ அறிக்கையை தொடர்ந்து சென்னையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிபட்டு வருகின்றனர்.அதேபோல் சென்னையில் இருந்து பிறமாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் இயங்கவில்லை.
மேலும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை 6 மணிக்கே மூடுவதற்கு தயார் நிலையில் இருக்குமாறு நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…