உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பை மீறும் செயல்..!!காவிரியில் மேகதாது அணை கட்டுவது..! கர்நாடகாவின் கோரிக்கையை பரிசீலிக்க கூடாது..! பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..!
காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகா வைத்த கோரிக்கையை பரிசீலிக்க கூடாது என்று தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகா வைத்த கோரிக்கையை பரிசீலிக்க கூடாது என்றும் அவ்வாறான சாத்தியக்கூறு அறிக்கையை பரிசீலிக்க வேண்டாம் என நீர்வள ஆணையத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மேகதாது அணைக்கு அனுமதி கோரி கர்நாடக அரசு தன்னிச்சையாக மத்திய நீர்வள ஆணையத்திற்குவிண்ணப்பித்துள்ளது.மேகதாது அணை தொடர்பாக கர்நாடகா அரசு தமிழக அரசை இதுவரை அணுகவில்லை என்றும் குறிப்பிட்ட முதல்வர் கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பை மீறும் செயலாக தெரிகிறது. மேலும் கர்நாடக அரசின் நடவடிக்கை, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று பிரதமருக்கு எழுதிய கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.
DINASUVADU