உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை!
உச்சநீதிமன்றம் ஜெயலலிதா கைரேகை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வேட்பு மனுவில் சின்ன ஒதுக்கீட்டு மனுவில் ஜெயலலிதாவின் கைரேகை போலியாக பெறப்பட்டதால் போசின் வெற்றியை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெங்களூரு சிறையில் ஜெயலலிதா இருந்தபோது பெறப்பட்ட கைரேகையை தாக்கல் செய்ய ஆணையிட்டார். இதை எதிர்த்து ஏ.கே.போஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது.
இதனை நீக்க கோரி, திமுகவின் டாக்டர் சரவணன் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அனைத்து மனுக்களையும் ஒன்றாக இணைத்து, விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதா கைரேகையை பெங்களூரு சிறை நிர்வாகம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும், ஜெயலலிதாவின் கைரேகை பதிவு இன்றி, வழக்கை நடத்தவும், சென்னை உயர்நீதிமன்றத்தை, அறிவுறுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.