உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை ..! செப்டம்பர் 10மஆம் தேதி முழு அடைப்பு …!இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு
செப்டம்பர் 10ம் தேதி காங்கிரஸ் சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10ம் தேதி காங்கிரஸ் சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்கும். போராட்டத்துக்கு வியாபாரிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.