சென்னை: . குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தடையின்றி விற்பனை செய்ய குட்கா வியாபாரி மாதவராவிடம் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் ரூ.40 கோடி வரை லஞ்சம் ெபற்றதாக தகவல் வெளியானது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.ேக.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உட்பட 40க்கும் மேற்பட்டோர் மாதவராவிடம் லஞ்சம் வங்கியதாக கூறப்பட்டது.
இதையடுத்து குட்கா வியாபாரி மாதவராவுக்கு சொந்தமான செங்குன்றத்தில் உள்ள குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. லஞ்ச வழக்கில் சிக்கி உள்ள டிஜிபி அதிகாரத்திற்கு உட்பட்டு தான் லஞ்ச ஒழிப்பு பிரிவு இயங்கி வருகிறது. இதனால் இந்த வழக்கு நியாயமாக நடைபெறாது என்று குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையை தொடர்ந்து குட்கா வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைதொடர்ந்து இந்த வழக்கு குறித்து சிபிஐ முதற்கட்ட விசாரணை நடத்தி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டிஐஜி எம்.கே.சின்கா, எஸ்பி கண்ணன் ஆகியோர் தலைமையில் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
பின்னர் சிபிஐ அதிகாரிகள் கடந்த 29ம் தேதி குட்கா வியாபாரி மாதவராவை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது மாதவராவ் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இந்நிலையில், டெல்லி, மும்பை பெங்களூரு பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை 6.30 மணி முதல் சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை, குண்டூர் ஆகிய ஊர்களில் 35 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக, இந்த வழக்கில் பல கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள தமிழக சுகாதராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை அண்ணாநகர் 5வது அவென்யூ ஓய் பிளாக்கில் உள்ள வீடு, சென்னை முகப்பேர் மேற்கு ஏரி திட்டப்பகுதி 8வது தெருவில் உள்ள தமிழக டிஜிபி. டி.கே.ராஜேந்திரன், முகப்பேர் மேற்கு நொளம்பூரில் உள்ள முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீட்டில் விடிய விடிய சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் வீடுகளில் ஏராளமான சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகள் சிக்கின என்று கூறப்படுகின்றது.இதன் மூலம் கடந்த மூன்று நாட்களாக தமிழக காவல்துறை பரபரப்பாகி உள்ளது.
DINASUVADU
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…