தமிழகத்தில் தற்போது நேர்மறையன அரசியல் வரவேண்டும். எதிர்மறை அரசியலுக்கு இனி வாய்ப்பு இல்லை என தமிழக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழகம் வந்த ராம ராஜ்ய யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, வி.சி.க, ம.தி.மு.க, நாம் தமிழர் போன்ற கட்சிகள் போராட்டம் நடத்துகிறீர்கள். நடத்துங்கள் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை கிடையாது. ஆனால், தமிழகத்திற்குள் ரதம் வரக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. இந்து மீதும் இந்து மதத்தை மதிப்பவர்கள் மீதும் நீங்கள் தொடுக்கும் தாக்குதாலாகவே நீங்கள் நடத்தும் போராட்டத்தை பார்கிறேன். ராமர் ரதத்தை இந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் துதிக்கட்டும். அது அவர்களின் வழிபாடு அதை தடுக்க நினைப்பது தவறு. “ரதத்தை நிறுத்த ஸ்டாலினுக்கு பலம் இருக்கிறது என்றால், ரதத்தை ஓடவிட தமிழிசைக்கு அதைவிட பலம் அதிகமாக இருக்கிறது”
ரதம் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் அமைதியாக வந்தது. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் எதிர்கிறார்கள். தமிழகம் பெரியார், அண்ணா வாழ்ந்த மண் என்கிறீர்கள். ஆனால் அவர்களுக்கு முன்பே ‘ஆழ்வார்கள், பெரிய ஆழ்வார் வாழ்ந்த மண் இது என்பதை ஸ்டாலின் போன்றவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்து மத நம்பிக்கையை எதிர்த்து வரும் ஸ்டாலினை மக்கள் அடையாளம் காண வேண்டும். தமிழகத்தில் தற்போது எதிர்மறை அரசியல் செய்து வருகிறார்கள். இத்தகைய அரசியலை இனி தமிழகத்தில் நடத்த முடியாது என ஸ்டாலின், திருமாவளவன், சீமானுக்கு கூறிக்கொள்கிறேன்.
தமிழகத்தில் தற்போது நேர்மறையன அரசியல் வரவேண்டும். எதிர்மறை அரசியலுக்கு இனி வாய்ப்பு இல்லை. மத நல்லிணக்கதிற்கு விரோதமான ரதம் தமிழகத்திற்குள் வரக்கூடாது என திருமாவளவன் சொல்கிறார். ரதம் வருவது எந்த விதத்தில் மத நல்லிணக்கத்திற்கு விரோதமாக இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம். நீங்கள் தான் மத நல்லிணக்கத்திற்கு விரோதமாக செயல்படுகிறீர்கள். உங்களுக்கு மட்டும்தான் அடாவடி செய்யத் தெரியும் என நினைக்க வேண்டாம். எங்களுக்கும் அடாவடி செய்யத்தெரியும். ஆனால் நாங்கள் அப்படி செய்ய மாட்டோம் தமிழகத்தில் நல்லாட்சி தரவேண்டும் என பா.ஜ.க நினைக்கிறது. தமிழகத்தில் அனைத்து தொகுதியையும் கைப்பற்றுவோம் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். தமிழக அரசு எங்களுடன் நல்லினக்கமாக இருக்கிறது. அது ஸ்டாலின் போன்ற எதிர்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை என தமிழக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…