கூட்டுறவு சங்க மேலாளர் , ஈரோடு அருகே தமிழக அரசின் விலையில்லா வேட்டிசேலையை வெளிமார்கெட்டில் விற்று 5 கோடியே 30 லட்ச ரூபாய் கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
சென்னிமலையில் இயங்கி வரும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் செந்தில்குமார் என்பவர் மேலாளராக பணியாற்றினார். இச்சங்கத்திற்கு தமிழக அரசுக்காக விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரையிலும் உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி, சேலைகள் வெளிமார்க்கெட்டில் விற்று கையாடல் செய்யப்பட்டிருப்பதாக கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநர் பிச்சை முத்து ஈரோடு வணிக குற்ற புலனாய்வு பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விசாரித்த காவல்துறையினர் கையாடல் நடைபெற்றது உறுதியானதைத் தொடர்ந்து, இதில் தொடர்பிருப்பதாக கூட்டுறவு சங்கத்தின் மேலாளர் செந்தில்குமாரை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…