கண்மாயில் குளித்த சிறுவர்கள் 3 பேர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி கலைஞர் நகரைச் சேர்ந்த நண்பர்கள், கௌதம், ராஜ்குமார், சஞ்சய் ஆகியோர், அருகே உள்ள நல்லூர் கண்மாயில் இன்று குளிக்கச் சென்றுள்ளனர். நீச்சல் தெரியாத மூவரும், தண்ணீரில் விளையாடியபோது, அடுத்தடுத்து நீரில் மூழ்கியுள்ளனர். அங்கு கால்நடைகள் மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இதைக் கண்டு, சிறுவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர். அதற்குள் மூவரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவத்தை அறிந்து அங்கு வந்த கிராம மக்கள் சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.
தகவலின்பேரில் வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார், மூவரின் உடல்களை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். கோடை விடுமுறை முடிந்து, நாளை பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில், 3 சிறுவர்கள் உயிரிழந்திருப்பது கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…