ஈரானில் தமிழக மீனவர்கள் 21 பேர் உண்ண உணவின்றி தவிப்பு!

Default Image

மீன்பிடித்த சம்பளத்தை ஈரானில் கேட்டதால் ஆத்திரம் அடைந்த படகு உரிமையாளர் துரத்தியடித்ததால், தமிழக மீனவர்கள் 21 பேர் உண்ண வழியின்றி சாலையோரத்தில் தவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறை, கடியப்பட்டினம் போன்ற மீனவ கிராமங்களைச் சேர்ந்த 8 மீனவர்கள், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் என 21 மீனவர்கள் ஈரான் நாட்டின் நகிதக்கி என்ற இடத்திற்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில், படகின் உரிமையாளரான சவூதி அரேபியாவைச் சேர்ந்த முகமது சலா என்பவர் கடந்த 6 மாதங்களாக மீனவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்றும், உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் சம்பளம் கேட்ட மீனவர்களை அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து வெளியேற்றி, பாஸ்போர்ட்டையும் கொடுக்க மறுப்பதாக மீனவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

இதனால், 21 மீனவர்களும் நடுரோட்டில் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சிலைத் தொடர்புகொண்ட மீனவர்கள், பாஸ்போர்ட் இல்லாததால் தங்களைக் கைது செய்ய வாய்ப்பிருப்பதாகவும், விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்