இஸ்லாமியர்களுக்கு மீலாது நபி வாழ்த்து – பன்வாரிலால் புரோஹித்..!!
மிலாது நபியையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மிக உயர்ந்த மனிதப் பண்புகளான ஒழுக்கம், கனிவு, இரக்கம் ஆகியவற்றை உயர்த்திப் பிடித்தவர் இறைத்தூதர் முகமது எனவும், அவர் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.இந்த மகிழ்ச்சியான நன்னாளில் நமது இஸ்லாமிய சகோதரர்கள், சகோதரிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
dinasuvadu.com