இவர் மட்டும் 16 வயது இளைஞராக திகழும் இளமையின் ரகசியம் என்ன?துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் என்றும் 16 வயது இளைஞராக திகழும் இளமையின் ரகசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதனின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அரசு 72 வருவாய் வட்டங்களை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன், அம்மா அரசு 72 வட்டங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் வட்டங்களை ஏற்படுத்தினால் தொடர்ந்து புகழ்வேன் என்று தெரிவித்தார்.
அப்போது அம்மா அரசு என கூறியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பேரவைக்கு கலர்ஃபுல்லாக வந்துள்ள துரைமுருகன் என்றும் 16-ஆக திகழும் இளமையின் ரகசியம் என்ன என கேள்வி எழுப்பியதால் சிரிப்பலை ஏற்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.