பாஜக தமிழகத்தில் தற்போது வரை நடிகர்களின் பின்னால் சென்று கொண்டிருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் ல் காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன் பின் மெரினாவில் அஞ்சலி செலுத்தியவுடன் மு.க.அழகிரி கூறுகையில், கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர.என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது.என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன் என்று பரப்பராக கூறினார்.
ஆனால் திமுக தலைவர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக முடிவெடுக்க ஆகஸ்ட் 28ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இதேபோல் நேற்று திமுகவில் என்னை இணைப்பதாக தெரியவில்லை என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், செப்டெம்பர் 5ஆம் தேதி பேரணிக்கு பிறகு அடுத்தக்கட்ட முடிவை அறிவிப்பேன். நேரம் வரும் போது எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன்.அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த குழப்பத்திற்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று கூறியுள்ளார்.மேலும் பாஜக தமிழகத்தில் தற்போது வரை நடிகர்களின் பின்னால் சென்று கொண்டிருக்கிறது. நடிகர்களின் பின்னால் செல்வதை நிறுத்தி தத்துவத்தை முன்னிறுத்தினால்தான் பாஜக வெற்றி பெற முடியும் என்றும் கூறியுள்ளார்.
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…