இலங்கை கடற்படையால் தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் கைது …!ஆட்சியரிடம் உறவினர்கள் மனு

Default Image

திரேஸ்புரத்தை சேர்ந்த 8 மீனவர்களை விடுவிக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் உறவினர்கள் மனு அளித்தனர்.
கடந்த சனிக்கிழமை இரவு தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தை சேர்ந்த மரிய பாக்கியத்திற்கு சொந்தமான நாட்டுப்படகில் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து 8 பேர் தங்குகடல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
இந்நிலையில்  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட திரேஸ்புரத்தை சேர்ந்த 8 மீனவர்களை விடுவிக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் உறவினர்கள் மனு அளித்தனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்