திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்வது தொடர்பான வழக்கில் மெரினாவில் இடமளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
நேற்று 11 ஆவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது .பின் தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
நேற்று மதியம் இதற்கு முன்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மு.க.அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமியும் முதல்வரை நேரில் சந்தித்தனர்.நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.அதன் பின்னர் மருத்துவமனையின் கருணாநிதி காலமானார் என்று அறிக்கை சரியாக மாலை 06.40 மணிக்கு வெளியிட்டனர்.இதன் பின்னர் தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
நேற்று தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை :
அந்த அறிக்கையில் , நாளை(இன்று ) திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அரசு விடுமுறை. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு தமிழக அரசு துக்கம் அனுசரிக்கப்படும் .திமுக தலைவர் கருணாநிதியின் உடலை சட்டச்சிக்கல் இருப்பதால் அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.
இதனால் சென்னை மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.மேலும் வேண்டும் வேண்டும் மெரினா வேண்டும்” என்று காவிரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் முழக்கம் எழுப்பினர்.இதனால் இவர்கள் மீது தடியடி நடைபெற்றது.பின்னர் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
இதன் பின் மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி திமுக மனு மீதான விசாரணை நேற்று இரவு நடைபெற்றது.சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது.இந்த விசாரணையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த 5 வழக்குகளையும் வாபஸ் பெறுவோம் என்று வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்தார். அண்ணா சமாதி இடம் கடற்கரை ஒழுங்குமுறை விதிகளின் கீழ் வரவில்லை என்றும் துரைசாமி வாதாடினார்.
இதனிடையில் இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய என்ன சட்ட சிக்கல் என்பதை தமிழக அரசு தெளிவு படுத்தவேண்டும் என்றும் இன்று காலை 8 மணிக்கு இதுகுறித்து விசாரணை நடைபெறும் என்று ஒத்திவைத்தனர் .
தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தனர் இதில் அவர்கள் கூறியிருப்பது மத்திய அரசின் சில விதிமுறைகளே காரணம் அதற்க்கு உட்பட்டே காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தங்களது பதில் மனுவில் தெரிவித்தனர்.
அதன் பின்னர் விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் மெரினாவில் தலைவர்களுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிரான 5 மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
மேலும் ஜெ. நினைவிடத்திற்கு எதிராக வேறு வழக்குகள் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் டிராபிக் ராமசாமி கூறுகையில் ,திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
சட்ட சிக்கல் இருப்பதாக அரசு கூறுகிறது, அந்த சிக்கல் என்ன என அரசு கூறவில்லை என்று திமுக தரப்பு வாதிட்டது.
மேலும் 13 முறை எம்எல்ஏவாக இருந்த கருணாநிதிக்கு, மெரினாவில் இடம் ஒதுக்காவிட்டால் தொண்டர்கள் உணர்வுகளை புண்படுத்தும் என்றும் வாதிட்டது.
அரசு தரப்பு வழக்கறிஞர் ஜானகி இறந்தபோது எம்.ஜி.ஆர். சமாதி அருகில் இடமளிக்க முடியாது என கருணாநிதி எழுதிய உத்தரவு உள்ளது என நகலை தாக்கல் செய்தார்.
முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க விதிகளில் இடமில்லை எனக் கூறி கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது ஜானகிக்கு இடம் ஒதுக்க மறுக்கப்பட்டது” என்று வாதிட்டது.
நள்ளிரவில் நடத்தியதாக சொல்கிறார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்திலேயே நடந்துள்ளது அவருக்கு தெரியாதா? உச்ச நீதிமன்றத்தில் இருந்து வந்த மூத்த வழக்கறிஞர், நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்பது சரியல்ல என்று திமுக தரப்பு வாதத்தில் தெரிவித்தது.
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரும் மனு மீது உடனடியாக தீர்ப்பளிக்க கூடாது என்று அரசு தரப்பு வாதிட்டது.
இந்நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்வது தொடர்பான வழக்கில் மெரினாவில் இடமளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், சுந்தர் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளனர்.
இறப்பிற்கு பின்னும் 14 மணி நேரம் போராடி இட ஒதுக்கீட்டில் வெற்றி பெற்றுள்ளார் கருணாநிதி.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…