இறந்த பின்னரும் போராடி வெற்றி …!நிறைவேறும் கருணாநிதியின் இறுதி ஆசை …!கருணாநிதியுடன் போராடி அடி வாங்கி அதிமுக அரசு…!

Published by
Venu

தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி மெரினாவில் நல்லடக்கம் செய்வது தொடர்பான மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று 11 ஆவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது .பின் தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை  அறிக்கை வெளியிட்டது.
Image result for கருணாநிதி
நேற்று  மதியம் இதற்கு முன்பாக  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மு.க.அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமியும் முதல்வரை நேரில் சந்தித்தனர்.நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.அதன் பின்னர் மருத்துவமனையின் கருணாநிதி காலமானார் என்று அறிக்கை சரியாக மாலை  06.40 மணிக்கு வெளியிட்டனர்.இதன் பின்னர் தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
நேற்று  தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,  திமுகவினர் முதலமைச்சரை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவிற்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பதில்  அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் , நாளை(இன்று ) திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அரசு விடுமுறை. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு தமிழக அரசு துக்கம் அனுசரிக்கப்படும் .திமுக தலைவர் கருணாநிதியின் உடலை சட்டச்சிக்கல் இருப்பதால் அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.
 
இதனால்  சென்னை மெரினாவில் திமுக  தலைவர் கருணாநிதிக்கு  இடம் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.மேலும்  வேண்டும் வேண்டும் மெரினா வேண்டும்” என்று  காவிரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் முழக்கம் எழுப்பினர்.இதனால் இவர்கள் மீது தடியடி நடைபெற்றது.பின்னர் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி திமுக மனு:
இதன் பின்  மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி திமுக மனு மீதான விசாரணை நேற்று இரவு நடைபெற்றது.சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது.இந்த விசாரணையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த 5 வழக்குகளையும் வாபஸ் பெறுவோம் என்று வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்தார். அண்ணா சமாதி இடம் கடற்கரை ஒழுங்குமுறை விதிகளின் கீழ் வரவில்லை என்றும் துரைசாமி வாதாடினார்.
இதனிடையில் இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய என்ன சட்ட சிக்கல் என்பதை தமிழக அரசு தெளிவு படுத்தவேண்டும் என்றும் இன்று காலை 8 மணிக்கு இதுகுறித்து விசாரணை நடைபெறும் என்று ஒத்திவைத்தனர் .

தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தனர் இதில் அவர்கள் கூறியிருப்பது மத்திய அரசின் சில விதிமுறைகளே காரணம் அதற்க்கு உட்பட்டே காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தங்களது பதில் மனுவில் தெரிவித்தனர்.
அதன் பின்னர் விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் மெரினாவில் தலைவர்களுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிரான 5 மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
மேலும் ஜெ. நினைவிடத்திற்கு எதிராக வேறு வழக்குகள் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும்  டிராபிக் ராமசாமி கூறுகையில் ,திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
சட்ட சிக்கல் இருப்பதாக அரசு கூறுகிறது, அந்த சிக்கல் என்ன என அரசு கூறவில்லை என்று திமுக தரப்பு வாதிட்டது.
மேலும் 13 முறை எம்எல்ஏவாக இருந்த கருணாநிதிக்கு, மெரினாவில் இடம் ஒதுக்காவிட்டால் தொண்டர்கள் உணர்வுகளை புண்படுத்தும் என்றும் வாதிட்டது.
அரசு தரப்பு வழக்கறிஞர் ஜானகி இறந்தபோது எம்.ஜி.ஆர். சமாதி அருகில் இடமளிக்க முடியாது என கருணாநிதி எழுதிய உத்தரவு உள்ளது என நகலை தாக்கல் செய்தார்.
முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க விதிகளில் இடமில்லை எனக் கூறி கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது ஜானகிக்கு இடம் ஒதுக்க மறுக்கப்பட்டது” என்று வாதிட்டது.
நள்ளிரவில் நடத்தியதாக சொல்கிறார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்திலேயே நடந்துள்ளது அவருக்கு தெரியாதா? உச்ச நீதிமன்றத்தில் இருந்து வந்த மூத்த வழக்கறிஞர், நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்பது சரியல்ல என்று திமுக தரப்பு வாதத்தில் தெரிவித்தது.
 
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரும் மனு மீது உடனடியாக தீர்ப்பளிக்க கூடாது என்று அரசு தரப்பு வாதிட்டது.
இந்நிலையில் தற்போது  திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்வது தொடர்பான வழக்கில் மெரினாவில் இடமளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த தீர்ப்பில்  சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், சுந்தர் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளனர்.இறப்பிற்கு பின்னும் 14 மணி நேரம் போராடி இட ஒதுக்கீட்டில் வெற்றி பெற்றுள்ளார் கருணாநிதி.
மேலும் திமுக தலைவர் கலைஞர் மெரினாவில் அடக்கம் செய்யப்படவுள்ள மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டது .இதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து விட்டது.

இதன் பின் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதித்த நிலையில் ஸ்டாலின் உள்ளிட்டோர் உணர்ச்சி பெருக்கால் கண்ணீர் சிந்தினர்.பின்னர் அருகில் இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர்  அண்ணா நினைவிடத்தின் வலதுபுறத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்யும் இடம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் ஆய்வு செய்தனர்.மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் பள்ளம் தோண்டுவதற்காக 2 ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டது.மேலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது திமுக தலைவர் கருணாநிதி சமாதி அமைக்கும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆனால் இரு கட்சிகளின் போட்டியின்  காரணமாகவே மெரினா  வழக்கு கருணாநிதி மரணத்திலும் நீடித்தது.ஆனால் அரசு தரப்பில் போதிய விளக்கம் இல்லாத காரணத்தால்  அரசின் வழக்கு தோல்வியிலே முடிந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

சென்னையில் நாளை தவெக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.…

30 minutes ago

இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் என்ன? புட்டு புட்டு வைத்த தலைவர் நாராயணன்!

சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக…

32 minutes ago

திருப்பதி கூட்ட நெரிசலில் உயிரிழப்பு – இருமாநில அரசு நிவாரணம் அறிவிப்பு.!

ஆந்திரப் பிரதேசம்: திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான…

53 minutes ago

வள்ளலாரை தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தத்தை செய்துவிட்டார்? சீமான் ஆவேசம்!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…

2 hours ago

“ஒரே வரியில முடிச்சிருக்கலாம்”..வேல்முருகனை கலாய்த்த துரைமுருகன்!

சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…

3 hours ago

“அஜித் சாருடன் இணைவது விரைவில் நடக்கும்”..லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…

4 hours ago