கோவை அரசு மருத்துவமனையில், இறந்த முதியவரின் சடலத்துக்கு பதிலாக வேறுவொருவரின் உடலை தர ஊழியர்கள் முயன்றதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். கோவை போத்தனூர் கோணவாய்க்கால்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால்(67). செக்யூரிட்டியாக பணியாற்றியவர். இவரின் மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நேற்று முன்தினம் இரவு ராஜகோபால் பாத்ரூமில் விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை, பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ராஜகோபால் உடலை நேற்று வந்து பெற்றுக்கொள்ள கூறினர்.
அதன்படி, உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு உடலை அவர்களுக்கு ஊழியர்கள் காண்பித்தனர். அது ராஜகோபால் உடல் இல்லை என உறவினர்கள் தெரிவித்தனர். போலீசார் இதுதான் ராஜகோபால் என கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து உடலை மாற்றி காண்பித்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். மருத்துவமனையில் ஏராளமான உடல்கள் இருந்ததால் ராஜகோபால் உடலை அடையாளம் காணமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ராஜகோபாலின் நெருங்கிய உறவினர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் பல்வேறு உடல்களை பார்த்த பின்னர், இறந்துபோன ராஜகோபாலின் உடலை அடையாளம் காட்டி பெற்றுச் சென்றனர். போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக, உடலை குளிர்சாதன பெட்டியில் கூட வைக்காமல் இருந்ததால், உடலை கண்டறிய முடியவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…